Sunday, July 26, 2015

வறுமையின் நிறம் சிவப்பு

ஒரு இண்டர்வியூவில் ரஜினி சொல்லுவார், 1980 களில் கமல் எவ்வளவு பெரிய நடிகர் என்பது இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று. "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தை நேற்று பார்த்தபோது இது முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
1980 பிற்பகுதியில் வந்த படத்திற்கு இன்று விமர்சனம் தேவையில்லை. இன்றும் அந்த படத்தில் ரசிக்க, பகிர்ந்துகொள்ள நிறையவே இருப்பதை அவதானிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் கே பியின் எழுத்து. கன்னத்தில் அறைந்தது போன்று சமூகத்திற்கு நச் என்ற வசனங்கள் ஏராளம்.
காலத்தால் அழியாத காதல் ஜோடி என்றால் அது ஸ்ரீதேவி கமல் தான். அந்த ஒரு ஜோடியே படத்தில் பாதியை பார்த்துக்கொள்ளும். இயக்குனருக்கு வேலை குறைவு தான். ஸ்ரீதேவியின் அப்பா ஸ்ரீதேவியிடம் பணம் கேட்கும் காட்சியில் "உங்களுக்கு வெட்கமே இல்லையா?" என்று ஸ்ரீதேவி கேட்க, "ஒஹ்ஹ் அப்போதான் பணம் குடுப்பியா? அப்போ வெட்கம் மானம் ரெண்டுமே இல்ல. 2 ரூபா கொடும்மா. Each one rupee" என்பார் அப்பா. இது அதிகம் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு காட்சி.
"விட்டா அப்பனையே வித்துருவான்" என்று பூனம் விஸ்வநாதன் சொல்லும்போது "எவன் வாங்குவான்?" என்பார் கமல். இன்னொரு காட்சியில் "கடவுள் படத்த விக்கபோறியா?" என்று எஸ் வீ சேகர் கேட்க "கடவுள் செத்துப்போன கிழவிக்கு உயிர் கொடுக்க போறதில்ல. அடக்க செலவுக்காவது உபயோகம் ஆகட்டுமே" என்ற வசனம் கமலுக்கே உரிய நச். ஆழமான வசனங்கள் தான் ஒரு படத்தை தூக்கி நிறுத்துகிறது. குப்பை தொட்டியைகிளறிக்கொண்டிருக்கும் கமல் ஸ்ரீதேவியிடம் "ஆரஞ்சு தோலா வருது. 

இந்த கட்டடத்துல வசதிக்காரங்க ஜாஸ்தியோ?" அதற்கு ஸ்ரீதேவி "இல்ல. வியாதிக்காரங்க ஜாஸ்தி". எம் எஸ் வி இசையில் சிப்பி இருக்குது, தீர்த்தக்கரையினிலே பாடல்கள் அற்புதம். எம் எஸ் வி மற்றும் கே பீ ஒரு தலைமுறையின் அடையாளம்.

Wednesday, July 22, 2015





நாம் போகும் பயணம்  எவ்வளவு  தூரமாக இருந்தாலும், அந்த  பாதையில் நிச்சயமாக   நமது  நினைவுகளையாவது  விட்டுச்செல்ல  வேண்டும் ... அது உயிர்  கொடுக்கும் மறுபடியும் 































Newsfirst.lk Sri Lanka's Number One Video News Provider. Website: www.newsfirst.lk Email: contact@newsfirst.lk Telephone: +94114792700 Like us on Facebook: https://www.facebook.com/newsfirst.en... Tweet to: @Newsfirst_en